search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை விவசாயிகள்"

    25 விவசாயிகள் பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரூ.17 மணியார்டர், சரியான முகவரி குறிப்பிடப்படவில்லை என்று தஞ்சை விவசாயிகளுக்கு திரும்பி வந்தது.
    தஞ்சாவூர்:

    மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6,000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தமான அறிவிப்பு இடம் பெறாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

    இதையடுத்து பட்ஜெட்டில் அறிவித்த ரூ.6 ஆயிரம் என்பது நாளொன்றுக்கு ரூ. 17 என கோரி தஞ்சையில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கடந்த 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 25 விவசாயிகள் தலைமை தபால் நிலையத்துக்கு சென்று பிரதமர் மோடிக்கு ரூ. 17 மணியார்டர் அனுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மணியார்டரில் சரியான முகவரி குறிப்பிடப்படவில்லை என்று அந்த மணியார்டர் அந்தந்த விவசாயிகளின் முகவரிக்கே திரும்பி வந்தது.

    இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததை கண்டித்து பிரதமர் மோடிக்கு மணியார்டர் அனுப்பினோம். ஆனால் இந்த மணியார்டரை வாங்கக்கூடாது என வேண்டுமென்றே எங்களுக்கு திருப்பி அனுப்பி உள்ளனர் என்றனர்.

    நாட்டிலேயே முதன் முறையாக பன்னாட்டு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டம் (சிஎஸ்ஆர்) நிதியின் மூலம் கும்பகோணம் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தூர் வார முடிவு செய்யப்பட்டுள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுப்பணித்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் விவசாயிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து உதவி கலெக்டர் எம்.பிரதீப்குமார் கூறியதாவது:-

    ஓ.என்.ஜி.சி நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ. 1 கோடி நிதியை வழங்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் கும்பகோணம் கோட்டத்தில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தாலுகாவில் உள்ள 39 அ பிரிவு வாய்க்கால்கள் 213 கி.மீட்டர் தூரத்துக்கு தூர்வாரப்பட உள்ளது.

    சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நாட்டிலேயே முதன்முறையாக வாய்க்கால்கள் தூர்வாரப்படுவது இதுவே முதல் முறை. இதில் விவசாயிகள் எந்தந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என ஏற்கனவே விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த வாரத்தில் இந்த தூர்வாரும் பணி தொடங்கவுள்ளது. தூர்வாருவதற்கு தேவையான எந்திரங்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள எந்திரங்களை பயன்படுத்தப்படும். அங்கு இல்லாத பட்சத்தில் தனியார் வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

    இந்த பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முடித்த பிறகு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பில் மற்ற எஞ்சிய வாய்க்கால்கள் தூர்வாரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன் கூறியதாவது: தூர்வாரும் பணியை வாய்க்காலின் இறுதி பகுதியிலிருந்து தொடங்கினால் தான் தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்லும். வாய்க் காலின் இருகரையையும் அளவீடு செய்து, கரைகளை பலப்படுத்தி அதில் பனைமரக்கன்றுகளை நட வேண்டும். முன்மாதிரியாக அனுதிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல் இருக்க விவசாயிகள் ஒத்துழைப்பை தருவோம் என்றார். #ONGC
    மேட்டூர் அணை திறந்த நிலையில், பல வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதை கண்டித்து தஞ்சை விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.

    இந்த நிலையில் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு மனு கொடுத்து விட்டு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    மத்திய அரசு 4 ஆண்டில் விவசாயிகளுக்கு எந்த சலுகைகளையும் செய்யவில்லை. வேளாண் பொருள்களுக்கு கட்டுபடியான விலையை அறிவிக்கவில்லை. நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 505, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் கேட்டால் நெல்லுக்கும், கரும்புக்கும் ரூ.200 அறிவித்துள்ளது. மேலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். மேட்டூர் அணை திறந்த நிலையில், பல வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே தூர்வாரும் பணியை எந்திரங்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

    2018-ம் ஆண்டிற்கு நடப்பு பருவ சம்பா சாகுபடி செய்வதற்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளில் விவசாய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து வெளியே வந்த அவர்கள் கையில் அச்சு வெள்ளம் வைத்து கொண்டும், தென்னை மரத்தின் மட்டையை அடித்து கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூரில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வெள்ளம் போல் பாய்ந்து வருகிறது. ஆனால் இந்த வெள்ள நீர் எங்கேயும் தங்காமல் கடலுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் கையில் அச்சு வெள்ளத்துடம் வந்துள்ளோம் என்றனர். #tamilnews
    ×